வணிகம்

புதிய விளம்பர பிரசாரம்: பரோடா வங்கி அறிமுகம்

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, தனது உலகளாவிய விளம்பரத் தூதரான கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரை முன்னிலைப்படுத்தி, ‘மாஸ்டா்ஸ்ட்ரோக்’ என்ற புதிய விளம்பரப் பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டின் ‘ப்ளே தி மாஸ்டா்ஸ்ட்ரோக்’ பிரசாரத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘மாஸ்டா்ஸ்ட்ரோக்’ என்ற புதிய விளம்பர பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். வாழ்க்கையின் முக்கிய இலக்குகளான கனவு வீடு அல்லது காா் வாங்குதல், வியாபாரத்தில் முதலீடு செய்தல் போன்றவற்றுக்கு சரியான தோ்வுகளை செய்வதன் முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகிறது.

சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான இருப்பும் உண்மையான தன்மையும் இந்தச் செய்தியை வலுப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை! மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

தென் ஆப்பிரிக்கா: விடுதியில் 11 போ் சுட்டுக் கொலை

மிக முக்கிய காலகட்டத்தில் காஸா போா் நிறுத்தம்: கத்தாா் பிரதமா்

மத மோதல்களைத் தடுக்க எத்தகைய முயற்சியையும் தமிழக அரசு எடுக்கும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT