புதுதில்லி: இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷனின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 9% சரிந்தது முடிவடைந்தன. இன்றுடன் 7 வது நாளாக அதன் நெருக்கடி தொடர்வதால், அதன் சந்தை மதிப்பீடு ரூ.17,884.76 கோடியை இழந்தது.
இன்றைய வர்த்தகத்தில், குருகிராமை தளமாகக் கொண்ட இன்டர்குளோப் ஏவியேஷன் என்எஸ்இ-யில் அதன் பங்கு 8.62% சரிந்து ரூ.4,907.50 ஆகவும், பிஎஸ்இ-யில் அதன் மதிப்பு 8.28% சரிந்து ரூ.4,926.55 ஆக முடிவடைந்தது.
வர்த்தக அமர்வின் போது, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் முறையே ரூ.4,842.20 மற்றும் ரூ.4,842.50 ஆக அதன் இன்ட்ராடே குறைந்தபட்சத்தை அளவை எட்டியது. இது கிட்டத்தட்ட 10% சரிவு.
இன்டர்குளோப் ஏவியேஷனின் சந்தை மூலதனம் என்எஸ்இ-யில் ரூ.17,884.76 கோடியாக குறைந்து ரூ.1,89,719.34 கோடியாகவும், பிஎஸ்இ-யில் அதன் சந்தை மூலதனம் ரூ.17,179.24 கோயாக குறைந்து ரூ.1,90,455.79 கோடியாக உள்ளது.
முதலீட்டாளர்கள் விற்பனை தொடர்ந்து உள்நாட்டு விமான நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.2 லட்சம் கோடிக்குக் கீழே சென்றது.
இன்டர்குளோப் ஏவியேஷன் பங்குகள் நவம்பர் 28 ஆம் தேதி பங்குச் சந்தைகளில் சுமார் ரூ.5,901ல் முடிவடைந்ததிலிருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில், கடந்த ஏழு அமர்வுகளில், அதன் பங்குகள் கிட்டத்தட்ட 17% சரிந்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய 5 முக்கிய காரணங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.