PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.09 ஆக நிறைவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வருவது உள்ளிட்ட காரணங்களால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.09 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய நிதி தொடர்ந்து வெளியேறி வருவது உள்ளிட்ட காரணங்களால், இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.09 ஆக நிறைவடைந்தது.

இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை தொடர்ந்து அதிகரித்ததும், பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல அழுத்தங்களால் முதலீட்டாளர்களின் மனநிலையை இது பலவீனப்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.07 ஆக தொடங்கி, பிறகு டாலருக்கு நிகராக ரூ.90.26 என்ற இன்ட்ரா-டே குறைந்தபட்சமாக சரிந்தது, அதன் முந்தைய முடிவை விட 31 பைசா குறைந்தது. வர்த்தகத்தின் முடிவில், டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு ரூ.90.09 ஆக இருந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 14 பைசா சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய 5 முக்கிய காரணங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா -2... ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!

அண்ணாமலை மீண்டும் தில்லி பயணம்!

ராணுவத்தில் உயிரி எரிபொருள் பயன்பாடு! அதிகாரப்பூர்வ தொடக்கம்!

அபிஷேக் சர்மாவின் விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம்: மார்க்ரம்

கோவா களிப்பு... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT