இந்திய ரூபாய் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் அதன் நிலையிலிருந்து பின்வாங்கியதால், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக உள்ளது.

டிசம்பரில் நடைபெற உள்ள கூட்டத்தில், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாலரின் பலவீனம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த மட்டத்தில் இருப்பதற்கு இது ஆதரவளித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.15 ஆக தொடங்கி, அதன் முந்தைய முடிவை விட 10 காசுகள் குறைந்தது. பிறகு அதன் முந்தைய முடிவிலிருந்து 17 காசுகள் அதிகரித்து ரூ.89.88 ஆக நிறைவடைந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.05 ஆக இருந்தது.

இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

கராத்தே பாபு டீசர்!

SCROLL FOR NEXT