பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம்..! 
வணிகம்

கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 436.41 புள்ளிகள் சரிந்து 84,666.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 120.90 புள்ளிகள் சரிந்து 25,839.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவை முன்னிட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கை மனநிலையால் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

ப்ளூ-சிப் தனியார் வங்கிகள், எண்ணெய் மற்றும் ஐடி பங்குகள் சரிந்ததால், இன்றைய இன்ட்ராடே அமர்வில் குறைந்தபட்ச அளவான 84,382.96 ஐ எட்டியது சென்செக்ஸ். வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 436.41 புள்ளிகள் சரிந்து, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு 84,666.28 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 120.90 புள்ளிகள் சரிந்து 25,839.65 புள்ளிகளாக நிலைபெற்றது.

தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி மற்றும் பலவீனமான உலகளாவிய குறிப்புகள் உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் உணர்வைப் பாதித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. அதே வேளையில், எடர்னல், டைட்டன், அதானி போர்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

உள்நாட்டில் பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கிய நிலையில், நாளை நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவு, ரூபாய் பலவீனம், தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்களிடமுள்ள பங்குகளை விற்று லாபத்தை முன்பதிவு செய்தினர். அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் அதிகரித்தன.

பங்கு சார்ந்த நடவடிக்கையில், 2-வது காலாண்டில், ஃபுஜியாமா பவர் சிஸ்டம்ஸ் லாபம் 97% உயர்ந்த நிலையில் அதன் பங்குகள் 1% அதிகரிப்பு. இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 69% உயர்ந்த போதிலும் பிசிக்ஸ்வாலா பங்குகள் 2% சரிந்தன. லோ வோல்டேஜ் மோட்டார்ஸ் மற்றும் கியர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சீமென்ஸ் விற்பனை செய்ததையடுத்து அதன் பங்குகள் 2% சரிந்தன.

தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் விடிஎம் பங்குகள் கிட்டத்தட்ட 5% சரிந்தன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது இரண்டு போயிங் 737 விமானங்களை சேவையில் இணைத்ததால் அதன் பங்கின் விலை 6% உயர்ந்தன. குடியிருப்பு திட்டத்தில் 81% விற்பனையைப் பதிவு செய்ததில் அஜ்மேரா ரியாலிட்டி பங்குகள் 4% அதிகரிப்பு. ரூ.806 கோடி திட்ட வெற்றியால் சோலார்வேர்ல்ட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்கு விலை 2% அதிகரிப்பு.

பல்ராம்பூர் சினி மில்ஸ், டாடா கெமிக்கல்ஸ், மகாநகர் கேஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், சபையர் ஃபுட்ஸ், பிரமல் பார்மா, ப்ளூ டார்ட், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், ஏசிசி, சம்பல் உரங்கள், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், ஐனாக்ஸ் விண்ட், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பவர் ஃபைனான்ஸ், என்சிசி, டிரென்ட், ஆர்இசி, பிஏஎஸ்எஃப் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வாரக் குறைந்த அளவை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில், ஹாங்காங் ஹேங் செங் குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு, தென் கொரியா கோஸ்பி ஆகியவை சரிந்தும் ஜப்பானின் நிக்கி 225 சந்தை உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.655.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,542.49 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 0.27% குறைந்து 62.33 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT