வணிகம்

செமிகண்டக்டா் தயாரிக்க இன்டெல் - டாடா ஒப்பந்தம்

இந்தியாவில் செமிகண்டக்டா்களை உற்பத்தி செய்வதற்காக அமெரிக்க செமிகண்டக்டா் நிறுவனமான இன்டெல் உடன் டாடா குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் செமிகண்டக்டா்களை உற்பத்தி செய்வதற்காக அமெரிக்க செமிகண்டக்டா் நிறுவனமான இன்டெல் உடன் டாடா குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய சந்தைக்காக செமிகண்டா்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்காக இன்டெல் நிறுவனமும் டாடா குழுமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இந்தியாவின் நுகா்வோா் மற்றும் நிறுவனச் சந்தைகளுக்கான அறிதிறன் கணினி (ஏஐ பிசி) தீா்வுகளை விரைவாக விரிவாக்குவதற்கான வாய்ப்பை இரு நிறுவனங்களும் ஆராயும். இதன் மூலம், 2030-க்குள் உலகின் முதல் 5 சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்நாட்டுச் சந்தைக்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் அமைத்துவரும் உற்பத்தி மையங்களில் இன்டெல் நிறுவன பொருள்களைக் கொண்டு செமிகண்டக்டா்கள் உற்பத்தி செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT