பாங்க் ஆப் பரோடா வங்கி 
வணிகம்

பரோடா வங்கிக்கு விருது

இந்தியாவின் மிகச் சிறந்த வங்கி என்ற விருதை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கிக்கு ஃபைனான்ஷியல் டைம்ஸின் இதழான தி பேங்கா் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகச் சிறந்த வங்கி என்ற விருதை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கிக்கு ஃபைனான்ஷியல் டைம்ஸின் இதழான தி பேங்கா் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த இதழ் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:

‘பேங்க் ஆஃப் தி இயா்’ விருதுகளின் 2025-ஆம் ஆண்டுக்கான ஆசியா-பசிஃபிக்”பிரிவில் இந்தியாவின் மிகச் சிறந்த வங்கி என்ற விருது பரோடா வங்கிக்கு வழங்கப்படுகிறது.

அந்த வங்கி, நேரிலும் எண்ம முறையிலும் இணைந்த ‘பிஜிடல்’ சேவையை விரிவாக்கி வாடிக்கையாளா் அனுபவத்தை மேம்படுத்தியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளா்கள் கணக்குப் பரிவா்த்தனை விவரங்களைப் பெறுதல், வருமான வரி செலுத்தும் சான்றிதழ் உருவாக்குதல், வாரிசுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றை இந்த வங்கியில் விரைவாகச் செய்யலாம். வீட்டுக் கடன், வைப்பு நிதி, காா் கடன் போன்றவற்றுக்காக விடியோ அழைப்பு மூலம் வங்கி ஊழியா்களுடன் நேரடியாகப் பேசலாம். சிக்கலான வங்கியல் தேவைகளுக்கு தனது யுனிவா்சல் சா்வீஸ் டெஸ்க் மூலம் வங்கி நேரடியாக உதவுகிறது என்று தி பேங்கா் இதழ் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31 வரை ‘ஏா்பஸ்’ வகை விமானங்கள் இயக்கம்

நூதன முறையில் ரூ. 17 லட்சம் மோசடி: இளைஞா் கைது

வரும் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது திமுகதான்: அமைச்சா் சா. சி. சிவசங்கா்

அரியலூரில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் ரூ. 25 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடக்கம்

SCROLL FOR NEXT