PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.90.74 ஆக நிறைவு!

இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இன்று ரூ.90.80 என்ற வரலாறு காணாத அதன் மிகக் குறைந்த நிலைக்கு சென்றது. பிறகு ரூ.90.74 என்ற அதன் வாழ்நாள் காணாத குறைந்த மட்டத்தில் நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால், இந்திய ரூபாய் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.80 என்ற வரலாறு காணாத அதன் மிகக் குறைந்த நிலைக்கு சென்றது. முடிவில் 25 காசுகள் சரிந்து ரூ.90.74 என்ற புதிய வாழ்நாள் காணாத குறைந்த மட்டத்தில் நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பானது, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.90.53 என்ற அளவில் வர்த்தகமானது. பிறகு சரிந்து, அதன் வரலாறு காணாத குறைந்தபட்ச அளவான ரூ.90.80க்கு சென்றது. இது அதன் முந்தைய நாள் வர்த்தகத்தின் இறுதி விலையிலிருந்து 31 காசுகள் சரிவாகும்.

வர்த்தக முடிவில், ரூபாய் மதிப்பு முந்தைய நாளின் இறுதி விலையை விட 25 காசுகள் சரிந்து ரூ.90.74 என்ற வரலாறு காணாத குறைந்த அளவில் நிலைபெற்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய் நிகராக டாலர் மதிப்பு் 17 காசுகள் சரிந்து ரூ.90.49 என்ற வரலாறு காணாத குறைந்த மட்டத்தில் வர்த்தகமானது.

இதையும் படிக்க: சரிவுடன் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!

The rupee on Monday crashed to its lowest-ever level of 90.80 before settling at a fresh all-time low of 90.74 against the US dollar, registering a loss of 25 paise over its previous close.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெகிழியில்லா கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

காற்று மாசு அதிகரிப்பு: தில்லியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே வகுப்புகள்!

கருணாநிதி குரலில் பேசிய நாசர்!

SCROLL FOR NEXT