அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வர்த்தக நேர முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ. 90.78 ஆகக் குறைந்தது.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ரூ. 90.87 ஆகக் குறைந்துள்ளது.
சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பனை செய்வது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாதது, இந்தியாவின் இறக்குமதி குறைவு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை இன்று சரிவைச் சந்தித்து வருகிறது. இது இந்திய ரூபாயின் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.