வணிகம்

ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 84,559.65 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு, 41.55 புள்ளிகள் சரிந்து 25,818.55 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: பலவீனமான ரூபாய், தொடர்ந்து வெளியேறும் அந்நிய நிதி மற்றும் தாமதமான இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவையால், இந்தியப் பங்குச் சந்தையின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக சரிந்து முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 84,559.65 ஆகவும், அதே சமயம் நிஃப்டி 50 குறியீடு, 41.55 புள்ளிகள் சரிந்து 25,818.55 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸ் இன்று 84,889 புள்ளிகளாக உச்சம் தொட்ட நிலையில், நிஃப்டி 25,929 புள்ளிகளுடன் பின் தொடர்ந்தது. என்எஸ்இ-யில் இன்று 3,224 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,054 பங்குகள் உயர்ந்தும், அதே சமயம் 2,083 பங்குகள் சரிந்தும், 87 பங்குகள் எந்த விலை மாற்றமுமின்றி முடிவடைந்தன.

16 முக்கியத் துறைகளில் 11 துறைகள் இன்றைய வர்த்தகத்தில் சரிந்த நிலையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்கு குறியீடுகள், முறையே 0.5% மற்றும் 0.7% சரிந்ன. இந்த ஒட்டுமொத்த சரிவு, பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், முந்தைய வர்த்தகமான ரூ.467.64 லட்சம் கோடியிலிருந்து ரூ.466 லட்சம் கோடியாக சரிந்ததால், முதலீட்டாளர்கள் இன்றைய அமர்வில் சுமார் ரூ.1.6 லட்சம் கோடி இழந்தனர்.

நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐஷர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா நுகர்வோர் ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் மேக்ஸ் ஹெல்த்கேர், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், டிரெண்ட், அப்பல்லோ மருத்துவமனைகள் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

சென்செக்ஸில் ட்ரென்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், டைட்டன் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

நிஃப்டி-யில் பிஎஸ்யூ வங்கி குறியீடு 1.3% உயர்ந்த நிலையில், நிஃப்டி மெட்டல் குறியீடு 0.25% உயர்ந்தன. அதே நேரத்தில் நிஃப்டி நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிஃப்டி மீடியா குறியீடு முறையே 1% மற்றும் 1.7% சரிந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், நேற்றைய வர்த்தகத்தில் (செவ்வாய்கிழமை) அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,381.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,077.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

வேதாந்தா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகிய 94 நிறுவனங்களின் பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை தொட்ட நிலையில் ஏசிசி, ஆர்இசி, பிஎஃப்சி, கோல்கேட் பாமோலிவ் இந்தியா, மேன்கைண்ட் பார்மா, யுனைடெட் ப்ரூவரீஸ் மற்றும் பேஜ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 196 நிறுவனங்கள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார குறைந்த விலையை எட்டியது.

சர்வதேச ப்ரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 2.12% உயர்ந்து 60.17 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டின் ஞாபகம்: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி. கடும் தாக்கு!

தி ராஜாசாப் படத்தின் விடியோ பாடல்!

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை: 2026 இறுதிக்குள் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அமல்!

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

அதிபர் டிரம்ப்பின் புதிய மருமகள் பெட்டினா ஆண்டர்சன்!

SCROLL FOR NEXT