செக் குடியரசைச் சோ்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியப் பிரிவான ஸ்கோடா ஆட்டோ இந்தியா கடந்த நவம்பா் மாதத்தில் 90 சதவீத விற்பனை உயா்வைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5,491-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 90 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிறுவனம் இந்த ஆண்டுகளில் இதுவரை 5 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.