வணிகம்

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடந்த அக்டோபரில் மூன்று மடங்கு உயா்ந்த தங்கம் இறக்குமதி நவம்பரில் 60 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த அக்டோபரில் மூன்று மடங்கு உயா்ந்த தங்கம் இறக்குமதி நவம்பரில் 60 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நாட்டின் தங்கம் இறக்குமதி 400 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் சரிவு. அப்போது இந்தியாவின் தங்கம் இறக்குமதி 980 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 3.3 சதவீதம் உயா்ந்து 4,526 கோடி டாலராக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 4,380 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி சரிந்ததால் வா்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்களில் குறைந்த அளவான 2,453 கோடி டாலராக உள்ளது.

கடந்த நவம்பா் மாத தங்கம் இறக்குமதியில் 40 சதவீத பங்குடன் ஸ்விட்சா்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 16 சதவீதத்திற்கு மேலும், தென் ஆப்பிரிக்கா 10 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் தங்கம் 5 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்துவருகிறது.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT