புதுதில்லி: கடந்த வாரம், டாப் 10 அதிக மதிப்புள்ள நிறுவனங்களில், முதல் ஆறு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு ரூ.75,256.97 கோடியாக உயர்ந்தது. இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டின.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,594.96 கோடி உயர்ந்து ரூ.11,87,673.41 கோடியாகவும், இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு ரூ.16,971.64 கோடி அதிகரித்து அதன் மொத்த மதிப்பு ரூ.6,81,192.22 கோடியாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சந்தை மதிப்பு ரூ.15,922.81 கோடி உயர்ந்து ரூ.9,04,738.98 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.12,314.55 கோடி உயர்ந்து ரூ.21,17,967.29 கோடியாகவும், பார்தி ஏர்டெல் சந்தை மூலதனம் ரூ.7,384.23 கோடி அதிகரித்து ரூ.11,95,332.34 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மதிப்பு ரூ.68.78 கோடி உயர்ந்து ரூ.5,60,439.16 கோடியாகவும் உள்ளது.
அதே வேளையில், எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.21,920.08 கோடி சரிந்து ரூ.15,16,638.63 கோடியாகவும், எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.9,614 கோடி சரிந்து ரூ.5,39,206.05 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ.8,427.61 கோடி சரிந்து ரூ. 9,68,240.54 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ.5,880.25 கோடி சரிந்து ரூ.6,27,226.44 கோடியாகவும் உள்ளது.
பங்குச் சந்தையில் மதிப்புமிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.