மும்பை: கடந்த இரண்டு நாட்களாக நீடித்த ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐடி மற்றும் மருந்து பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதும் மற்றும் கலவையான உலகளாவிய குறிப்புகள் காரணமாக ஏற்பட்ட நிலையற்ற வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடான ஆன சென்செக்ஸ் 42 புள்ளிகள் சரிந்தது முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 85,704.93 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 85,342.99 புள்ளிகளையும் தொட்டது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 42.64 புள்ளிகள் சரிந்து 85,524.84 புள்ளிகளகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி, 4.75 புள்ளிகள் உயர்ந்து 26,177.15 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸில், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா, எடர்னல், ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி சுசூகி ஆகியவை சரிந்த நிலையில் ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் கோல் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும், அதே சமயம் இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு மாற்றமின்றி முடிவடைந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4% உயர்ந்தன.
பங்குகளைப் பொறுத்தவரை, ரூ.5.83 கோடி மொத்தப் பரிவர்த்தனை ஒப்பந்தம் மூலம் 5% அதிகரித்த பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ். பெங்களூரில் 53 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதால் புரவங்கரா பங்குகள் 6% உயர்வுடன் நிறைவு.
ரூ.329.45 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் கையகப்படுத்தியதால் ஆண்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல் பங்குகள் 6% உயர்ந்தன. 72.2 லட்சம் பங்குகள் மீதான பிளாக் டீல் காரணமாக ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஏசியா பங்குகள் 3% உயர்ந்தன. ரூ.356.77 கோடி மதிப்புள்ள ஆர்டரை வென்றதால் சக்தி பம்ப்ஸ் பங்கின் விலை 2% உயர்வுடன் நிறைவு.
ரூ.670 கோடி மதிப்புள்ள ஆர்டரை வென்றதால், ஜிபிடி இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் பங்கின் விலை கிட்டத்தட்ட 3% உயர்ந்த நிலையில் தலைமைச் செயல் அதிகாரி ராஜினாமாவயடுத்து எஸ்ஆர்எம் கான்ட்ராக்டர்ஸ் பங்கின் விலை 6% சரிவுடன் நிறைவு பெற்றது.
என்எம்டிசி, ஹிந்துஸ்தான் காப்பர், வோடபோன் ஐடியா, சிட்டி யூனியன் வங்கி, யுபிஎல், நால்கோ, ஹிந்துஸ்தான் ஜிங்க், ஐஷர் மோட்டார்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, மாருதி சுசுகி, லாரஸ் லேப்ஸ், எம்&எம் ஃபைனான்சியல் உள்ளிட்ட 100 பங்குகள் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்தும், அதே சமயம் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கட்கிழமை) ரூ.457.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.4,058.22 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
சர்வதேச ப்ரென்ட் கச்சா எண்ணெய், 0.10% உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 62.13 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.