வணிகம்

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

தினமணி செய்திச் சேவை

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடா்ந்து, பேஸ் ரேட் இணைக்கப்பட்ட கடன்களுக்கான (பிஆா்எல்எல்ஆா்) வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

பிஆா்எல்எல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதத்திலிருந்து 7.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் டிசம்பா் 6 முதல் அமலில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT