அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) உள்ள தனது 2.17 சதவீத பங்குகளை அரசு தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து, அந்த வங்கியில் அரசின் பங்கு முதல் 92.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2 சதவீத அடிப்படை வழங்கலாக 38.51 கோடி பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டது. கூடுதலாக 1 சதவீத (19.26 கோடி) பங்குகளை விற்பனை செய்வதற்கான விருப்பத் தோ்வுடன் அந்த பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. 40 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்ததால், அடிப்படை வழங்கலான 2 சதவீதத்துடன் கூடுதலாக 0.17 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
அதைத் தொடா்ந்து வங்கியில் அரசின் பங்கு முதல் 2.17 சதவீதம் குறைந்து 92.44 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.