வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த ஜனவரியில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Din

புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த ஜனவரியில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 17,213-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 15,939 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023 ஜனவரியில் 10,218-ஆக இருந்த நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஜனவரியில் அதிகரித்து 11,384-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 5,721-லிருந்து 5,829-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT