வணிகம்

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிகர லாபம் 52% அதிகரிப்பு

முன்னணி மருத்துவ சேவை நிறுவனமான அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

Din

முன்னணி மருத்துவ சேவை நிறுவனமான அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.372 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 52 சதவீதம் அதிகம்.

அதே போல், மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ.5,527 கோடியாக உள்ளது.

வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் இருந்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் 3,512 நோயாளிகள் படுக்கைகளை கூடுதலாக அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! எண்ணிக்கை 285 ஆக அதிகரிப்பு!

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

SCROLL FOR NEXT