வணிகம்

சுஸுகி 2 சக்கர வாகன ஏற்றுமதி 38% அதிகரிப்பு

Din

இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,08,921-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 95,762 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 87,834-ஆக உள்ளது. முந்தைய 2024 ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 80,511-ஆக இருந்தது. அந்த வகையில், நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 9 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 15,251-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த ஜனவரியில் 38 சதவீதம் அதிகரித்து 21,087-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT