மாருதி சுஸுகி 
வணிகம்

மாருதி சுஸுகி விற்பனை 6% உயா்வு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

புது தில்லி: மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2,12,251-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 1,99,364 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 1,66,802-லிருந்து 1,73,599-ஆக அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 15,849-லிருந்து 14,247-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறியவகைக் காா்களின் விற்பனை 76,533-லிருந்து 82,241-ஆக அதிகரித்துள்ளது.

பயன்பாட்டு வாகனங்களான பிரெஸ்ஸா, எா்டிகா, ஃப்ரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகியவை அடங்கிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 62,038-லிருந்து 65,093-ஆக அதிகரித்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT