இன்றைய ரூபாய் மதிப்பு... PTI
வணிகம்

ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு! ரூ. 86.87

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிக நேர முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது.

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிக நேர முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது.

அதிக அளவிலான வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வணிகத்தின் டாலரின் தேவை அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு சரிவதற்கான முதன்மை காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 86.70 காசுகளாக வணிகம் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து ரூ. 86.68 காசுகள் வரை மதிப்பு உயர்ந்தது. எனினும் பிற்பாதியில் அதிக அளவிலான நிதி வெளியேறியதால் தொடந்து சரிந்து அதிகபட்சமாக ரூ. 86.88 காசுகள் வரை மதிப்பு சரிந்தது.

வணிக நேர முடிவில் முந்தைய நாள் மதிப்பில் இருந்து 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ. 86.71 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

பங்குச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.65 புள்ளிகள் உயர்ந்து 75,996.86 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.076 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.25 புள்ளிகள் உயர்ந்து 22,959.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.13 சதவீதம் உயர்வாகும்.

பார்மா, மெட்டல் மற்றும் நிதித் துறை பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்து 0.5 - 1% வரை ஏற்றம் கண்டன. ஆட்டோமொபைல், டெலிகாம், ஐடி துறை பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT