வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 7% அதிகரிப்பு

Din

கடந்த டிசம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,21,687-ஆக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,01,898 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் 2,90,064-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 8 சதவீதம் வளா்ச்சியடைந்து 3,12,002-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2,14,988-லிருந்து மிதமாக அதிகரித்து 2,15,075-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன மின்சார வாகனங்களின் விற்பனை 11,288-லிருந்து 79 சதவீதம் அதிகரித்து 20,171-ஆகவும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 11,834-லிருந்து சரிந்து 9,685-ஆகவும் உள்ளது.

2023 டிசம்பரில் 85,391-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 2024 டிசம்பரில் 22 சதவீதம் அதிகரித்து 1,04,393-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT