ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்) 
வணிகம்

2024 நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி குவித்த ரிசர்வ் வங்கி!

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நவம்பர் மாதத்தில் மட்டும் 53 டன் தங்கத்தை வாங்கி உள்ள வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு (2024) நவம்பரில் மட்டும் 8 டன் தங்கத்தை வாங்கியுள்ளது.

DIN

மும்பை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நவம்பர் மாதத்தில் மட்டும் 53 டன் தங்கத்தை வாங்கியுள்ள வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி 2024 நவம்பரில் மட்டும் எட்டு டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சுணக்கத்தால், மத்திய வங்கிகள் இந்த உலோகத்தைக் குவிப்பதற்கான கூடுதல் உத்வேகத்தில் இறங்கியது.

ரிசர்வ் வங்கி, மற்ற மத்திய வங்கிகளைப் போலவே, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் வாங்கி வருகிறது. குறிப்பாக புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்படும் நிச்சயமற்ற காலங்களில், தங்கத்தின் விலைகள் உயரும் என்பது கோட்பாடு.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், அந்நிய நிதி தொடர்ந்து வெளியேற்றம், பணவீக்கம், வேலையின்மை மற்றும் கடன் விகிதங்கள் அதிகரித்த போது தங்கம் கணிசமாக வளர்ந்துள்ளது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

நவம்பரில் தனது கையிருப்பில் எட்டு டன் தங்கத்தை இணைத்தது மூலம், 2024ல் முதல் 11 மாதங்களில், 73 டன்களாகவும், மொத்த தங்க இருப்பு 876 டன்களாகவும் ரிசர்வ் வங்கி உயர்த்தி, போலந்திற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய வாங்குபவராக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டது.

சீன மக்கள் வங்கி ஆனது ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு தங்க கொள்முதலை வேட்டையை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அதன் இருப்புக்களில் ஐந்து டன் தங்கத்தை இணைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டின் நிகர கொள்முதல் 34 டன்களாகவும், அதன் மொத்த தங்க இருப்பு 2,264 டன்னாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

இதற்கிடையில், சிங்கப்பூர் நாணய ஆணையம் மிகப்பெரிய தங்க விற்பனையாளராக இருந்ததுள்ளது. அதன் தங்க இருப்புக்களை 5 டன் குறைத்ததும், அதன் பிறகு நிகர விற்பனை 7 டன்னாகவும், ஒட்டுமொத்தமாக அதன் தங்க இருப்பு 223 டன்னாகவும் உள்ளது.

2023 ஆம் ஆண்டு, இதே காலகட்டத்தில் வாங்கப்பட்ட உலோகத்தின் அளவை விட ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் மொத்த தங்க இருப்பு இப்போது 890 டன்னாக உயர்ந்துள்ளது. இதில் 510 டன் இந்தியாவில் உள்ளது.

உலக தங்க கவுன்சில் கூற்றுப்படி, நவம்பர் மாதத்தில் போலந்து 21 டன் தங்கத்தையும், உஸ்பெகிஸ்தான் 9 டன் தங்கத்தையும் வாங்கி உள்ளனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்

பயங்கரவாத அமைப்புகளின் மனித ஜிபிஎஸ் சுட்டுக் கொலை!

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... டெல்னா டேவிஸ்!

ஆசிய கோப்பையைப் புறக்கணித்த பாகிஸ்தான் தமிழ்நாட்டிற்கு வர ஒப்புதல்!

அழகு பட்டாம்பூச்சி... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT