சித்தரிக்கப்பட்டது |கோப்புப் படம் | இந்திய பங்குச் சந்தை  
வணிகம்

கரடியின் ஆதிக்கத்தால் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

கரடிகள் ஆதிக்கத்தால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் மேல் சரிந்து, பிறகு கலவையான போக்கில் முடிவடைந்தது.

DIN

மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தைப் போக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேறுதல்களுக்கு மத்தியில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் சரிவில் முடிவடைந்தது.

வர்த்தகத்தின் தொடக்கத்தில் கரடிகள் ஆதிக்கத்தால் சென்செக்ஸ் 200 புள்ளிகள் மேல் சரிந்து, பிறகு கலவையான போக்கில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஐடி, எண்ணெய் & எரிவாயு, எஃப்எம்சிஜி துறை பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் காலை நேர இழப்புகளை சற்றே சமம் செய்ய முடிந்தது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 50.62 புள்ளிகள் குறைந்து, 78,148.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 18.95 புள்ளிகள் குறைந்து 23,688.95 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

நிஃப்டியில் இன்று ஆக்சிஸ் வங்கி, மாருதி, ஓஎன்ஜிசி, ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ட்ரெண்ட், பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.

சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

இதையும் படிக்க: பஜாஜ் விற்பனை 3,23,125-ஆகக் குறைவு

துறை வாரியாக எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு, ஐடி துறை ஆகியவை 0.3 முதல் 1.5 சதவிகிதமும், பொதுத்துறை வங்கி, பார்மா, மெட்டல், மீடியா, மீடியா, வங்கி, ஆட்டோ 0.4 முதல் 1 சதவிகிதம் வரை சரிந்தது.

அனந்த் ராஜ், பிடிசி இண்டஸ்ட்ரீஸ், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், அபர் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

மறுபுறம் பந்தன் வங்கி, கஜாரியா செராமிக், மஹிந்திரா லைஃப், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், அஸ்ட்ரல், யெஸ் வங்கி, பாலாஜி அமின்ஸ், ஐஆர்சிடிசி, பிர்லாசாஃப்ட், அலோக் இண்டஸ்ட்ரீஸ், ரிலாக்ஸோ காலணி, நெட்வொர்க் 18, கன்டெய்னர் கார்ப்பரேஷன், ப்ராக்டர் மற்றும் கேம்பிள் ஹைஜீன் உள்ளிட்ட 100 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார சரிவை சந்தித்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,491.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

ஆசிய சந்தைகளில், சியோல் உயர்ந்தும் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை கலவையான போக்கில் முடிவடைந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.38 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 77.34 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT