அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ. 85.87 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்து ரூ. 85.91 காசுகளாக இருந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரிப்பதும், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் அதிகரிப்பதும் ரூபாய் மதிப்பு சரிவதற்கான காரணங்களாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடந்த டிசம்பர் முதலே, பெரும்பாலும் ரூபாய் மதிப்பு சரிவுடனேயே இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலும் இதே நிலை நீடித்து வருகிறது. ரூபாய் மதிப்பு நேற்று அதிகபட்சமாக 17 காசுகள் சரிந்து ரூ. 85.91 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ. 85.94 காசுகளாக இருந்தது.
பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையால் ரூபாய் மதிப்பு நிலையற்றதாக இருந்து வந்தது. வணிக நேர முடிவில் ரூ. 85.87 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க | சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: வங்கி, பொதுத் துறையில் ஏற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.