கோப்புப் படம் ANI
வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: வங்கி, பொதுத் துறையில் ஏற்றம்!

மெட்டல், வங்கி, நுகர்வோர் பொருள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் ஏற்றம்

DIN

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (ஜன. 9) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 528 புள்ளிகளும் நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

எனினும், மெட்டல், வங்கி, நுகர்வோர் பொருள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 528.28 புள்ளிகள் சரிந்து 77,620.21 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.68 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 162.45 புள்ளிகள் சரிந்து 23,526.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.69 சதவீதம் சரிவாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 252 புள்ளிகள் உயர்ந்து 78,206 புள்ளிகளாகத் தொடங்கியது. எனினும் படிப்படியாகச் சரிந்து 77,542 புள்ளிகள் வரை அதிகபட்சமாகச் சரிந்தது. வணிக நேர முடிவில் 528 சரிந்து 77,620 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக நெஸ்ட்லே இந்தியா நிறுவனப் பங்குகள் 1.63% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ் 1.44%, எம்&எம் 1.31%, கோட்டாக் வங்கி 1.22%, ஏசியன் பெயின்ட்ஸ் 0.68%, பாரதி ஏர்டெல் 0.50% உயர்ந்திருந்தன.

இதேபோன்று டாடா ஸ்டீல் -2.05%, எல்&டி -1.91%, சொமேட்டோ -1.88%, டாடா மோட்டார்ஸ் -1.87%, அதானி போர்ட்ஸ் -1.74% சரிந்திருந்தன.

இதேபோன்று வணிக நேரத் தொடக்கத்தில் 23,674 புள்ளிகளுடன் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 23,689 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதேபோன்று 23,503 என்ற அதிகபட்ச சரிவையும் சந்தித்தது. வணிக நேர முடிவில் 162 புள்ளிகள் சரிந்து 23,526 புள்ளிகளாக வணிகம் சரிந்தது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் எஸ்.ஆர்.எஃப். 13.70%, பஜாஜ் அமினேஸ் 9.66%, நவின் ஃபுளோரின், அல்கைல் அமினிஸ், என்.எல்.சி. இந்தியா, மர்கோ, ஜி.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT