புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது.
இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வெளியீட்டு விலையிலிருந்து 23.36 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.528 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது மேலும் 36.37% அதிகரித்து, ரூ.583.70 ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் 26.63 சதவிகிதம் உயர்ந்து ரூ.542 ஆக பட்டியலிடப்பட்டது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,129 கோடியாக உள்ளது.
லக்ஷ்மி டென்டல் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ ஆனது ஏலத்தின் இறுதி நாளில் 113.97 மடங்கு சந்தாவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு! ரூ.86.55
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.