PTI Graphics
வணிகம்

ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு! ரூ.86.55

இன்றைய வர்த்தகத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.86.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.86.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு முதலீட்டாளர்களின் உணர்வுகளை தழுவியதால், இன்றைய வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.86.55-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.48 ஆகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக 86.46 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 86.57 புள்ளிகள் வரையிலும் சென்றது.

இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 86.55-ஆக முடிவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 86.60 ரூபாயாக இருந்தது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT