வணிகம்

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 25% அதிகரிப்பு!

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது.

DIN

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இன்று 3வது காலாண்டிற்கான முடிவுகளை அறிவித்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.548.02 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.436.97 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 25 சதவிகிதம் அதிகமாகும்.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வருவாயும் 26 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,448.86 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,946.18 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 25 சதவிகிதம் அதிகரித்து ரூ.806 கோடியாக இருந்தது.

வருடாந்திர அடிப்படையில், 31 டிசம்பர் 2024 நிலவரப்படி மொத்த செயல்படாத சொத்து மற்றும் நிகர செயல்படாத சொத்து, 31 டிசம்பர் 2023 நிலவரப்படி 0.25% மற்றும் 0.10% க்கு முறையே 0.29% மற்றும் 0.13% ஆக இருந்தது.

நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வர்த்தகம் முடிந்த பிறகு வெளியிடப்பட்டது. இதனிடையில், இன்றைய வர்த்தக நேர முடிவில் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் 3 சதவிகிதம் சரிந்து ரூ.105.40 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 15% அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டுமனைப் பட்டா கோரி கிராம மக்கள் மனு

புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

ஆவணி ஞாயிறு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருடப்படேட 82 கைப்பைசிகள் மீட்பு: இருவா் கைது

அரசினா் மருத்துவமனையில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT