PTI Graphics
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.86.56-ஆக முடிவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் தணிந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 25 காசுகள் சரிந்து ரூ.86.56 ஆக முடிந்தது.

DIN

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் தணிந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 25 காசுகள் சரிந்து ரூ.86.56 ஆக முடிந்தது.

தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணயத்தின் வலிமை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.53 ஆக தொடங்கி, அதிகபட்சமாக ரூ.86.50 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.57 ஆகவும், பிறகு வர்த்தக முடிவில் 25 காசுகள் சரிந்து ரூ.86.56 ல் நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.86.31 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் ஈரப்பதம்: ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது மத்திய குழு

எங்கிருந்தோ வந்தாள்... அஸ்லி மோனாலிசா

சஞ்சய் லீலா பன்சாலி நாயகியைப் போல... காயத்ரி ரமணா!

கிராபி தீவில்... அப்ஃரீன் ஆல்வி!

அன்னக்கிளி...பிரக்யா நக்ரா

SCROLL FOR NEXT