டிவிஎஸ் மோட்டார் 
வணிகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 20% அதிகரிப்பு!

விற்பனை அதிகரித்ததன் காரணமாக, டிசம்பர் மாத 3வது காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்து ரூ.609.35 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

புதுதில்லி: விற்பனை அதிகரித்ததன் காரணமாக, டிசம்பர் மாத 3வது காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்து ரூ.609.35 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டு இதே காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.509.61 கோடியாக இருந்தது. மூன்றாம் காலாண்டு செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.10,113.94 கோடியிலிருந்து ரூ.11,134.63 கோடியானது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் மொத்த செலவினம் ரூ.9,362.83 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.10,272.62 கோடியானது.

டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 12.12 லட்சமாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இது 11.01 லட்சம் யூனிட்களாக இருந்தது என்று டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை 2023 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 5.23 லட்சத்திலிருந்து 6 சதவிகிதம் அதிகரித்து 5.56 லட்சமாக இருந்தது. ஸ்கூட்டர் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்து 4.93 லட்சமாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் அதன் மூன்று சக்கர வாகன விற்பனை 29,000 யூனிட்களாக இருந்தது. இது 2024 ஆம் நிதியாண்டின் 3 வது காலாண்டில் 38,000 யூனிட்களாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை 57 சதவிகிதம் அதிகரித்து 76,000 யூனிட்களாக உள்ளது. 2023 டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இதுவே 48,000 யூனிட்களாக இருந்தது.

இதையும் படிக்க: பெல் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

SCROLL FOR NEXT