வணிகம்

ஜென் 3 மாடலை அறிமுகப்படுத்தும் ஓலா நிறுவனம்!

எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஓலா நிறுவத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

DIN

புதுதில்லி: எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஓலா நிறுவத்தின் தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஓலா நிறுவனரான பவிஷ் அகர்வால் இன்று ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

ஓலா எலெக்ட்ரிக், ஜென் 3 ஸ்கூட்டர்ஸ் வெளியிடும் தருவாயில் எங்களின், 'அடுத்த நிலை' ஒலிக்கிறது! அதிக செயல்திறன், அதிக அம்சங்கள், சிறந்த வடிவமைப்பு ஆகியவற்றுடன் ஒவ்வொரு வகையிலும் ஜென் 2 தயாரிப்புகளை நாங்கள் கணிசமாக விஞ்சியுள்ளோம். தொழில்துறையை மீண்டும் மாற்றுவது ஒரு ஆச்சரியம் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஓலா எலக்ட்ரிக் ஜனவரி 31 ஆம் தேதி தனது புதிய தயாரிப்பான ஜென் 3 மாடலை வெளியிடும். புதிய தளம் மூலம் ஜென் 3 ஸ்கூட்டர்ஸ் சுமார் 20 சதவிகித சேமிப்பைக் தரும் என்று ஓலா எலக்ட்ரிக் எதிர்பார்க்கிறது.

இதையும் படிக்க: 10 கிராமுக்கு ரூ.83,750 என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

SCROLL FOR NEXT