ஐ-க்யூப் 
வணிகம்

புதிய ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ இன்று அறிமுகப்படுத்தியது.

DIN

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அதன் முதன்மை மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ ரூ.1.03 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் 6 லட்சத்திற்கும் அதிகமான ஐ-க்யூப் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் புதிய மாறுபாடுகளுடன் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 3.1 கிலோவாட் பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கிமீ தூரம் பயனிக்கும் திறன் கொண்டது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் மேலும் தெரிவித்ததாவது:

டிவிஎஸ் ஐ-க்யூப் ஒவ்வொரு நாளும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1,03,727 ல் தொடங்குகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கிமீ வரை பயனம் மேற்கொள்ள முடியும் என்று ஐடிசி - சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. கூடுதல் பாதுகாப்பிற்காக இந்த வாகனம் ஹில் ஹோல்டுடன் வருகிறது.

Summary: TVS Motor Company has introduced its flagship electric scooter iQube equipped with enhanced features.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: ரேணுகா உள்ளே; ஷஃபாலி வெளியே

நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாய்கள் தொல்லை; பொதுமக்கள் அச்சம்

இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனம் முற்றுகை

காரில் மது கடத்திய இருவா் கைது

SCROLL FOR NEXT