முகப்பு
வணிகம்

தங்கம் விலை இன்றும் உயர்வு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

Updated On : 3 ஜூலை, 2025 at 10:01 AM
கோப்புப்படம் - ANI
பகிர்:
Updated On : 3 ஜூலை, 2025 at 9:51 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை ஒரு சவரனுக்கு ரூ. ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனையானது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.105 மற்றும் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 72,520 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Updated On : 3 ஜூலை, 2025 at 9:58 AM

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ. 320-ம், கிராமுக்கு ரூ. 40-ம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 9,105 -க்கும் ஒரு சவரன் ரூ. 72,840 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 121 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,21,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of gold jewellery in Chennai increased by Rs. 320 per sovereign on Thursday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.