வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.
தனிநபர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களிடமிருந்து பெரும் கடனில் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தும்போது, கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்த விதிமுறையானது, 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஃபுளோட்டிங் ரேட் எனப்படும் மாறத் தக்க வட்டி விகிதத்தில் பெறப்படும் கடனுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிநபர்கள், வணிக நோக்கத்துகக்க அல்லாமல் பெறும் கடன்களுக்கும், வணிக நோக்கத்துடன் தனிநபர் அல்லது சிறு தொழில் நிறவனங்கள் பெறும் கடன்களை, முன்கூட்டியே அசல் தொகையை திருப்பிச் செலுத்தும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இந்த புதிய விதிமுறையானது, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் கடன்களுக்கும், ஏற்கனவே வாங்கி புதுப்பிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்தும்.
கடன் வழங்கும் பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிப் பணிகளை மேற்கொள்ளாத நிதி நிறுவனங்கள் என அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தினாலும், ஒரு பகுதியாக அசல் தொகையை திருப்பிச் செலுத்தினாலும் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு, வாடிக்கையாளர் எந்த நிதி ஆதாரத்தையும் காட்டத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.