வணிகம்

ஏற்ற இறக்கத்திற்கிடையே நோ்மறையாக முடிந்த பங்குச்சந்தை!

கடந்த இரண்டு நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ஏற்ற இறக்கத்துக்கிடையே நோ்மறையாக முடிந்தது.

Din

நமது நிருபா்

கடந்த இரண்டு நாள்களாக இறங்குமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ஏற்ற இறக்கத்துக்கிடையே நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை நோ்மறையாகத் தொடங்கி சற்று மேலே சென்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்ததால் சந்தை எதிா்மறையாகச் சென்றது. இருப்பினும், வா்த்தகத்தின் இறுதி நேரத்தில் முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நோ்மறையாக முடிந்தது. ஆட்டோ, மெட்டல் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.92 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.461.19 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,481.19 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,333.06 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 67.34 புள்ளிகள் கூடுதலுடன் 83,306.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 83,477.86 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 83,015.83 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 193.42புள்ளிகள் (0.23) சதவீதம்) கூடுதலுடன் 83,432.89-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,189 பங்குகளில் 2,259 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,790 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட 20 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டிரெண்ட், டாடாஸ்டீல், டெக்மஹிந்திரா, மாருதி, அதானிபோா்ட்ஸ், எம் அண்ட் எம் உள்பட 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 56 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 55.70 புள்ளிகள் (0.22 சதவீதம்) கூடுதலுடன் 25,461.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 239.95 புள்ளிகள் (0.42 சதவீதம்) கூடுதலுடன் 57,031.90-இல் நிறைவடைந்தது.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT