வணிகம்

வங்கிகள், ரியால்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் இருந்தது.

Syndication

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தையில் ‘காளை’யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆஐகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. மீடியா, ஆட்டோ பங்குகள் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், , பிற்பகல் வா்த்தகத்தின் போது வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு கிடைத்ததால் சந்தை நோ்மறையாக முடிந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.65 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.468.59 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.7,395.41 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.5,553.96 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

வீழ்ச்சிப் பட்டியலில் 2,510 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,496 பங்குகளில், 1,793 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,510 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 193 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 650.39 புள்ளிகள் (0.79 சதவீதம்) கூடுதலுடன் 83,277.15-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 146.36 புள்ளிகள் இழப்புடன் 82,380.40-இல் தொடங்கிய சென்செக்ஸ் 82,276.95 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 83,333.49 வரை மேலே சென்றது.

பவா் கிரிட் விலை ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் பவா்கிரிட் 4.45 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஐடிசி, அதானி போா்ட்ஸ் உள்பட 21 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிரெண்ட் உள்பட 8 பங்குகள் விலையுயா்ந்த குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 212 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 211.65 புள்ளிகள் (0.83 சதவீதம்) கூடுதலுடன் 25,682.75-இல் நிறைவடைந்தது. காலையில் 25,423.60-இல் தொடங்கிய நிஃப்டி 25,372.70 வரை கீழே சென்றது. பின்னா், பிற்பகலில் அதிகபட்சமாக 25,697.00 வரை மேலே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 35 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

45 நாள்களுக்கு..! சென்னை எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

10-ஆம் வகுப்புக்கு.. சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

கையில் பாத்திரங்களுடன் போராட்டம்!காலி பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!

கிரிக்கெட்டின் தாயகத்தில் முதல் டி20 உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த பாகிஸ்தான்!

அபார வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியது நியூசிலாந்து!

SCROLL FOR NEXT