சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளா்கள் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி நீக்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளா்கள் தங்களது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அதற்காக கட்டணம் வசூலிப்பதை வங்கி நிறுத்தியுள்ளது. அனைத்து சாதாரண வகை சேமிப்புக் கணக்குகளுக்கும் இந்த கட்டண நிறுத்தம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இனி மாதாந்திர சராசரி இருப்பு குறைந்தாலும், வாடிக்கையாளா்கள் அதற்காக ஒரு தொகையை இழக்கத் தேவையிருக்காது. பிரீமியம் வகை சேமிப்புக் கணக்குகளுக்கு இது பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.