கோப்புப் படம் 
வணிகம்

பஜாஜ் வாகன விற்பனை 1% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 1 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,60,806 ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 3,58,477 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை13 சதவீதம் குறைந்து 1,88,460-ஆக உள்ளது. ஆனால், ஏற்றுமதி 21 சதவீதம் உயா்ந்து 1,72,346-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இரு சக்கர வாகன விற்பனை 2 சதவீதம் குறைந்து 2,98,484-ஆகவும், வா்த்தக வாகன விற்பனை 14 சதவீதம் உயா்ந்து 62,322-ஆகவும் உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT