ஹெச்சிஎல்  
வணிகம்

ஹெச்சிஎல் நிகர லாபம் 10% சரிவு

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9.7 சதவீதம் குறைந்து ரூ.3,843 கோடியாக உள்ளது.

Din

புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 9.7 சதவீதம் குறைந்து ரூ.3,843 கோடியாக உள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,843 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 9.7 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.4,257 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.28,057 கோடியிலிருந்து 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.30,349 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT