கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் 10 நகரங்களில் 4.7 லட்சம் வீட்டுமனைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், இந்தூர், பெங்களூரு, நாகபுரி, ஜெய்பூர், மைசூர். ராய்ப்பூர், சூரத் ஆகிய இந்தியாவின் 10 முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2025 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 4.7 லட்சம் வீட்டுமனைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.2.44 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா நெருக்கடிக்குப் பிறகு வீட்டு மனைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. காரணம், இது கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைவிட எளிதில் விற்பனையாகக் கூடிய சொத்து வகையாகவும் மதிப்பு அதிக அளவில் உயரும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.
பல வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களை விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க விரும்புவதால் வீட்டுமனைகளை அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2024-இல் இந்த 10 நகரங்களிலும் வீட்டுமனைகளின் அறிமுகம் 1,63,529-இலிருந்து 23 சதவீதம் குறைந்து 1,26,556-ஆக உள்ளது. 2025-இன் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் அந்த நகரங்களில் 45,591 வீட்டு மனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன
2024-இல் இந்த 10 நகரங்களில் வீட்டு மனைகளின் சராசரி விலை 27 சதவீத வருடாந்திர வளர்ச்சி கண்ட ஒரு சதுர அடிக்கு ரூ.3.679-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.