வணிகம்

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்: டிசிஎஸ்

டிசிஎஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு, வளர்ச்சி தற்போது முன்னுரிமையாக உள்ளது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற முயற்சிகள் வேலை உருவாக்கத்தை எவ்வாறு அதிகரிக்க உதவும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழு சூழ்நிலையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதே வேளையில் கவலை கொண்டுள்ளது. அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வதும் ஏன் இப்படி நடைபெறுகிறது என்பதனையும் ஆராயும்.

நாடு முழுவதும் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது பணிநீக்கம் குறித்த அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டு 12,261 ஊழியர்களை ஆதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 2 சதவிகிதத்தை பணிநீக்கம் செய்ய போவதாக தெரிவித்ததால் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பெரும்பகுதி நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களாக கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை படிப்படியாக அமல்படுத்தப்படும்.

ஜூன் 30, 2025 நிலவரப்படி பணியாளர்களின் எண்ணிக்கை 6,13,069 ஆக உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த முதல் காலாண்டில் மேலும் 5,000 ஊழியர்களை அதிகரித்ததுள்ளது டிசிஎஸ்.

தொழில்நுட்பத்தில் முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சந்தை விரிவாக்கம் மற்றும் பணியாளர் மறுசீரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக மாறுவதற்கான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் பல புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல், புதிய சந்தைகளில் நுழைதல், வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்குமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், வாடிக்கையாளர் கூட்டாணியை ஆழப்படுத்துதல், அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஊழியர் மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட முயற்சிகள் இதில் அடங்கும்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.67ஆக நிறைவு!

TCS decision to lay off over 12,000 employees has raised eyebrows.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சிம்பு 51: படப்பிடிப்பு தாமதம் ஏன்? இயக்குநர் விளக்கம்!

ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

பாலஸ்தீன அரசு ஒருபோதும் அமையாது; அது எங்கள் நிலம்: நெதன்யாகு

SCROLL FOR NEXT