ஹூண்டாய் க்ரெட்டா கார் 
வணிகம்

ஹூண்டாய் மோட்டார் நிகர லாபம் 8% சரிவு!

ஜூன் வரையான முதல் காலாண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் சரிந்து ரூ.1,369 கோடியாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

புதுதில்லி: ஜூன் வரையான முதல் காலாண்டில், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 8 சதவிகிதம் சரிந்து ரூ.1,369 கோடியாக உள்ளது. விற்பனை குறைந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,490 கோடியாக இருந்தது.

ஜூன் வரையான காலாண்டில் மொத்த வருமானம் ரூ.16,628 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் அது ரூ.17,568 கோடியாக இருந்தது என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 0.62 சதவிகிதம் குறைந்து ரூ.2,087.75 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT