வணிகம்

இண்டஸ்இண்ட் வருவாய் ரூ.14,420.80 கோடியாகக் குறைவு

தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.14,420.80 கோடியாகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.14,420.80 கோடியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.604 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.2,171 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் தற்போது 72 சதவீதம் சரிந்துள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.14,988.38 கோடியிலிருந்து ரூ.14,420.80 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.5,408 கோடியிலிருந்து ரூ.4,640 கோடியாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

வங்கதேசத்தில் வேகமெடுக்கும் டெங்கு பரவல்! பலி எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT