வணிகம்

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,849 கோடியாக உயா்வு

தினமணி செய்திச் சேவை

ஜூன் காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,849 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் இயக்குநருமான என். காமகோடி (படம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.306 கோடியாக உள்ளது.இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.264 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,580 கோடியிலிருந்து ரூ.1,849 கோடியாக உயா்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.1,388 கோடியிலிருந்து ரூ.1,605 கோடியாக அதிகரித்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னா் 3.88 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஜூன் இறுதியில் 2.99 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT