சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 
வணிகம்

சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

DIN

சென்னை: இந்தியன் ஆயில் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகரின் அருகில் அமைந்துள்ள அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்து வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதன் மூலதன விரிவாக்கத்திற்காக ரூ.400 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விற்பனை நிலையத்தை வைத்திருந்தது. தற்போது, ​​நாங்கள் மீண்டும் இந்த வளர்ச்சிப் பாதையில் இறங்குகிறோம்.

இந்த வைர விழா ஆண்டில், நாங்கள் வைர விழா விற்பனை நிலையங்களை நிறுவ முடியும் என்பதை உணர்கிறோம். அதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் என்றார் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கர்.

தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை விவரிக்க மறுத்துவிட்ட அவர், வைர விழா கொண்டாட்டங்களின் போது, ​​நிறுவனம் முதல் சுற்று சில்லறை விற்பனை நிலையங்களைத் தொடங்கும் என்றார்.

சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய இருப்பதாகவும் அதே வேளையில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சகத்திடம் பெற்றுள்ளோம் என்றார்.

சில்லறை விற்பனை நிலையங்களின் விரிவாக்கம், நிலவும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் சங்கர்.

இதையும் படிக்க: அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT