ரெட்மி பேட் 2  படம்: X/Xiaomi
வணிகம்

அதிக பேட்டரி திறனுடன் ரெட்மி பேட் 2!

இந்த வாரம் வெளியாகும் ரெட்மி பேட் 2 சிறப்பம்சங்கள்...

DIN

ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மியின் பேட் 2 (Pad 2) ஆண்ட்ராய்டு டேப்லட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலின் அடுத்த வரிசையாக 4 ஜி இணைப்புடன் ரெட்மி பேட் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

மீடியாடெக் ஹீலியோ ஜி100 அல்ட்ரா சிப்செட்

2.5கே தெளிவுத்திறன் கொண்ட 11 இன்ச் திரை

பேட்டரி  9,000 எம்ஏஎச்

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜர்

8 எம்பி ஏஐ பின்புறக் கேமிரா

5 எம்பி முன்புறக் கேமிரா

டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 19 மணிநேரம் விடியோ பார்க்க முடியும், 22 மணிநேரம் படிக்க முடியும், 270 மணிநேரம் பாடல் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 22,000*

8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 26,000*

பிலிப்பைன்ஸ் நாட்டில் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிற நாடுகளில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அண்ணா எனும் பசுமாடு..! DMK எனும் காக்கா..!" அண்ணாமலை

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டம்! அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரிக்கை!

”விஜய்யிடம் முதலில் என்ஜின் இருக்கா?” தவெகவை விமர்சித்த அண்ணாமலை

அண்ணாவின் நினைவுநாள்! எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

உச்ச நீதிமன்றத்தில் நாளை மமதா பானர்ஜி வாதிடுவார்!

SCROLL FOR NEXT