வணிகம்

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முன்னுரிமை ஒதுக்கீடுகள், நிறுவகாத்தில் உள்ள ஆதித்ய குமார் ஹல்வாசியா மற்றும் எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்டிற்கு வழங்கப்பட்டன.

முன்னுரிமை வெளியீட்டில் முதலில் 2.70 கோடி ஈக்விட்டி பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.114 விலையில் ஒதுக்கப்பட்டன. இது மொத்தம் ரூ.308 கோடியாகும். அதே விலையில் 3.80 கோடி மாற்றக்கூடிய ஈக்விட்டி வாரண்டுகளும் வழங்கப்பட்டது.

சலுகையின் ஒரு பகுதியாக, முதலீட்டாளர் குழுவினர் 1.68 கோடி மாற்றத்தக்க ஈக்விட்டி வாரண்டுகளுக்கு சந்தா செலுத்தியுள்ளனர்.

திரட்டப்பட்ட மூலதனம் வளர்ச்சி முயற்சிகள், செயல்பாட்டு மூலதனத் தேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் மிஷன்-கிரிட்டிகல் தீர்வுகளில் நிறுவனத்தின் புதுமை திறன்களை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

இதையும் படிக்க: வோடபோன் ஐடியா பங்குகள் 2% மேல் உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT