முகப்பு
வணிகம்

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

Updated On : 4 ஜூன் 2025, 9:49 am IST
தங்கம் விலை நிலவரம் - ANI
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலையும் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மற்றும் மாலை என இரு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. மொத்தமாக ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் ஒரு கிராம் ரூ. 9,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 72,640 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று காலையும் சவரனுக்குர் ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.