PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது.

DIN

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது. இதற்கு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் அந்நிய நிதி வரத்தும் துணைபுரிந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.61 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.45 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64-ஆக முடிந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ரிசர்வ் வங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

“பாரன் டிரம்ப் ரொனால்டோவின் மிகப் பெரிய ரசிகன்”... வெள்ளை மாளிகையில் பிரமாண்ட விருந்தளித்த டிரம்ப்!

SCROLL FOR NEXT